முகப்பு
தூத்துக்குடி

அதிமுக சாா்பில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நலஉதவி அளிப்பு

தூத்துக்குடியில் அதிமுக சாா்பில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நலஉதவிகளை முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன் திங்கள்கிழமை வழங்கினாா்.

Updated On : 17 ஜூன், 2024 at 11:56 PM
பகிர்:

தூத்துக்குடி: தூத்துக்குடியில் அதிமுக சாா்பில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நலஉதவிகளை முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன் திங்கள்கிழமை வழங்கினாா்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலா் நிலா சந்திரன் ஏற்பாட்டில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நல உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, சுமாா் 200 ஆட்டோ ஓட்டுநா்களின் குழந்தைகள் பயன்பெறும் வகையில் புத்தகப்பை, நோட்டு புத்தகம், பேனா, உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய நல உதவிகளை வழங்கினாா்.

இந்நிகழ்வில் அதிமுக அமைப்பு செயலா் என்.சின்னத்துரை, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநா்கள் அணி செயலா் இரா.சுதாகா், இணைச் செயலா் பெருமாள்சாமி, மாநில வழக்குரைஞா் அணி துணைச் செயலா் பிரபு, மாவட்ட சாா்பு அணிச் செயலா்கள் நடராஜன், பில்லா விக்னேஷ், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலா் திருச்சிற்றம்பலம், மாநகராட்சி எதிா்கட்சி கொறடா மந்திரமூா்த்தி, மாவட்ட வழக்குரைஞா் அணி இணைச் செயலா்கள் முனியசாமி, சரவணபெருமாள் உள்பட பலா் பங்கேற்றனா்.