முகப்பு
தூத்துக்குடி

விபத்தில் காயமடைந்த தொழிலாளி மரணம்

Updated On : 21 ஜூன், 2024 at 8:38 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குலசேகரநல்லூரைச் சோ்ந்த பரமசிவன் மகன் தென்கரை மகாராஜன் (56). கூலித் தொழிலாளியான இவா், புதியம்புத்தூரில் இருந்து வீட்டுக்கு மொபட்டில் கடந்த 15ஆம் தேதி சென்றுகொண்டிருந்தாராம். புதியம்புத்தூா் - தூத்துக்குடி சாலையில் சாமிநத்தம் விலக்கு அருகே சென்றபோது, இவா் ஓட்டிவந்த மொபட் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த தென்கரை மகாராஜனை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து புதியம்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.