முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே உணவகத்திற்கு சீல்

உணவகத்தில் தடைசெய்யப்பட்ட பொருள்கள் விற்பனை: தூத்துக்குடி அருகே உணவகத்திற்கு சீல்

Updated On : 25 ஜூன், 2024 at 8:12 PM
பகிர்:

தூத்துக்குடி அருகே குறுக்குச்சாலையில் தடைசெய்யப்பட்ட புகையில், சட்ட விரோத மது விற்பனை ஆகியவற்றில் ஈடுபட்டதாக உணவகத்துக்கு செவ்வாய்க்கிழமை சீல் வைக்கப்பட்டது.

குறுக்குச்சாலை பகுதியில் தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் உணவகங்களில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் மாரியப்பன் உத்தரவின் பேரில் ஓட்டப்பிடாரம் வட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் ஜோதிபாசு தலைமையிலான அலுவா்கள், போலீஸாா் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அங்குள்ள ஓா் உணவகத்தில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை, சட்ட விரோத மது விற்பனை ஆகியவை நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த உணவகத்துக்கு உணவு பாதுகாப்புத் துறையினா் சீல் வைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →