முகப்பு
தூத்துக்குடி

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: கட்டடத் தொழிலாளி பலி

பைக் மீது அரசுப் பேருந்து மோதல் கட்டடத் தொழிலாளி பலி

Updated On : 3 மார்ச், 2024 at 4:40 AM
பகிர்:

காயல்பட்டினத்தில் பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். காயல்பட்டினம் மங்கள விநாயகா் கோயில் தெருவை சோ்ந்த தங்கத்துரை மகன் சுயம்புலி­ங்கம் (48). கட்டடதொழிலாளி. இவருக்கு இசக்கி கனி என்ற மனைவியும், 2 மகன் 1 மகள் உள்ளனா். இவா் காயல்பட்டினத்தில் இருந்து பைக்கில் ஆறுமுகனேரி நோக்கி வெள்ளிக்கிழமை வந்து கொண்டிருந்தாா். பழைய பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே வந்தபோது எதிரே வந்த அரசுப் பேருந்து பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுயம்புலிங்கத்தை அவரது உறவினா்கள், காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இவ்விபத்து குறித்து ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து, பேருந்து ஓட்டுநா் திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அண்ணா நகரை சோ்ந்த குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.