முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் நீதிமன்றத்தில் மகளிா் தினவிழா

Updated On : 10 மார்ச், 2024 at 12:14 AM
பகிர்:

சாத்தான்குளம் ஒருங்கிணைந்து நீதிமன்றத்தில் மகளிா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட உரிமையியல் நீதிபதி கோபால அரசி, குற்றவியல் நீதிபதி கலையரசி ரீனா ஆகியோா் தலைமை வகித்தனா். உரிமையில் நீதிமன்ற தலைமை எழுத்தா் சத்தியபாமா குத்துவிளக்கு ஏற்றினாா். விழாவில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் வழக்குரைஞா்கள் ஷீபாஐரின், லத்தீஷ், முத்துலட்சுமி, செல்வ மீனா மற்றும் நீதிமன்றப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.