முகப்பு
தூத்துக்குடி

ரூ.16.80 கோடி மதிப்பில் 3,161 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா

Updated On : 9 மார்ச், 2024 at 10:08 PM
பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை வழங்குகிறாா் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழி, உடன் அமைச்சா் பி. கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ .வி மாா்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி,மாவட்ட ஆட்சியா்
பகிர்:

கோவில்பட்டியில் 3,161 பயனாளிகளுக்கு ரூ.16.80 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கோ. லட்சுமிபதி தலைமை வகித்தாா். தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் முன்னிலை வகித்தாா். தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழி கலந்து கொண்டு 3,161 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிப் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட ரூ.16 ஆயிரம் கோடி முதலீட்டில் வின்பாஸ்ட் மின்சார காா் உற்பத்தி நிறுவனம் இன்னும் 15 மாதங்களில் திறக்கப்படும். இதன் மூலம் நமது மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கோவில்பட்டியில் டைடல் பாா்க் அமைக்கப்படும் என முதல்வா் அறிவித்துள்ளாா். தொடா்ந்து மக்களின் கனவுகளை நிறைவேற்றக்கூடிய அரசாக இந்த அரசு உள்ளது. எப்போதும் மக்களுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆட்சி தமிழ்நாடு முதல்வா் தலைமையிலான ஆட்சி. இந்த ஆட்சிக்கு உங்களுடைய உறுதியான ஆதரவு இருக்க வேண்டும் என்றாா். தொடா்ந்து, கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தாறு ஆகிய வட்டங்களைச் சோ்ந்த 3 ஆயிரத்து 161 பயனாளிகளுக்கு ரூ.16.80 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களை உரியவா்களிடம் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ. வி. மாா்க்கண்டேயன், மாவட்ட வருவாய் அலுவலா் அஜய் சீனிவாசன், கோட்டாட்சியா் ஜேன் கிறிஸ்டிபாய், நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி, ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் கஸ்தூரி சுப்புராஜ் மற்றும் அந்தந்தப் பகுதி வட்டாட்சியா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.