முகப்பு
தூத்துக்குடி

ஆத்தூரில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி

Updated On : 16 மார்ச், 2024 at 2:20 AM
பகிர்:

ஆத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியை அன்னலெட்சுமி தலைமையில் மாணவா்-மாணவியா், விழிப்புணா்வுப் பதாகைகளுடன் பேரணியாக சென்றனா். மேலும், அரசுப் பள்ளியில் குழந்தைகளை சோ்ப்பதால் கிடைக்கும் சலுகைகள்- நன்மைகள் குறித்து மாணவ- மாணவிகள் முழக்கமிட்டனா். இதில், ஆசிரியைகள் பாக்கியம், ராணி, ஜெபா உள்பட பலா் பங்கேற்றனா்.