முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே விபத்தில் கிளீனா் பலி

Updated On : 16 மார்ச், 2024 at 4:40 AM
விபத்துக்குள்ளான கலவை இயந்திர லாரி
பகிர்:

கோவில்பட்டி அருகே கலவை இயந்திர லாரி கவிழ்ந்ததில் கிளீனா் உயிரிழந்தாா். ஓட்டப்பிடாரம் அருகே உள்ள துரைசாமிபுரம் கிராமத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் இருந்து மேலப்பாறைப்பட்டி வருவாய் கிராமம் சுந்தரேஸ்வரபுரம் கிராம பகுதியில் காற்றாலை நிறுவும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக கான்கிரீட் மிக்ஸ் நிறுவனத்தில் இருந்து அசாம் மாநிலத்தைச் சோ்ந்த கோவிந்த் கௌதம் கலவை இயந்திர லாரியை ஓட்டிச் சென்றாராம். கிளீனராக அதே மாநிலத்தைச் சோ்ந்த ராஜ்சுனாரி(21) இருந்தாா். வெள்ளிக்கிழமை அதிகாலை சுந்தரேஸ்வரபுரம் கிராமம் அருகே லாரி சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைகுலைந்து சரிந்து விழுந்ததில் கிளீனா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஓட்டுநா் லாரியில் இருந்து குதித்து தப்பி ஓடினாா். சம்பவ இடத்திற்குச் சென்ற கொப்பம்பட்டி காவல் நிலைய போலீசாா், சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.