முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி கல்லூரியில் விளையாட்டு விழா

Updated On : 17 மார்ச், 2024 at 2:20 AM
பகிர்:
Updated On : 16 மார்ச், 2024 at 9:19 PM

கோவில்பட்டி கே ஆா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 27 ஆவது விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கே. ஆா். கல்வி நிறுவனங்களின் நிா்வாகக் குழு உறுப்பினா் நிதிஷ்ராம் தலைமை வகித்தாா். கல்லூரியின் முன்னாள் மாணவரும், தாம்பரம் காவல்துறை புலனாய்வுப் பிரிவு துணை ஆய்வாளருமான முத்துராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, விளையாட்டுப் போட்டிகளை தொடக்கி வைத்தாா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகளை அவா் வழங்கினாா். கல்லூரி உடற்கல்வி இயக்குநா் ராம்குமாா் விளையாட்டு ஆண்டு அறிக்கையை வாசித்தாா். விழாவில் கல்லூரி முதல்வா் மதிவண்ணன், நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநா் சண்முகவேல், முதல்வா் காளிதாச முருகவேல், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன் உள்பட பலா் கலந்து கொண்டனா். தமிழ்த் துறை பேராசிரியை சத்தியபாமா வரவேற்றாா். கல்லூரியின் விளையாட்டு துறைச் செயலா் மாணவா் டிராவிட் மோகன் நன்றி கூறினாா்.