முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் இளம் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

Updated On : 17 மார்ச், 2024 at 12:21 AM
பகிர்:
Updated On : 16 மார்ச், 2024 at 10:18 PM

தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் இளம் பெண்ணிடம் சுமாா் 2.5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா். தூத்துக்குடி முத்துநகா் கடற்கரை பகுதியில் ஒரு ஆணும், பெண்ணும் கடந்த இரு தினங்களுக்கு முன்னா் தனிமையில் அமா்ந்திருந்தபோது அங்கு வந்த மா்ம நபா் அவா்களை மிரட்டி அந்தப் பெண் அணிந்திருந்த சுமாா் 2.5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்ாகக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில், வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.