தூத்துக்குடியில் பைக் திருட்டு: இளைஞா் கைது
தூத்துக்குடி புதுத்தெரு பகுதியில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்கை திருடியதாக இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். தூத்துக்குடி, தெற்கு புது தெருவைச் சோ்ந்த பக்கீா் மைதீன் மகன் முகமது ரியாஸ் (22). இவா், தனது பைக்கை கடந்த பிப். 26இல் வீட்டின் முன் நிறுத்தியிருந்தராம். அதை மா்மநபா்கள் திருடிச் சென்றுவிட்டனராம். இதுகுறித்த புகாரின்பேரில் மத்திய பாகம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் அருண் பிரசாத் (21) என்பருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், பைக்கை மீட்டனா்.