முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி கல்லூரியில் தேசிய மாநாடு

Updated On : 22 மார்ச், 2024 at 9:28 PM
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 8:34 PM

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் சுயநிதி பாடப் பிரிவில் வணிகவியல் தொழில்சாா் கணக்குவைப்பு முறையியல் துறை சாா்பில் தேசிய மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிதி சேவைகள்- சந்தைகளின் புதுமைகள் என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டுக்கு கல்லூரி முதல்வா் (பொ) சுப்புலட்சுமி தலைமை வகித்தாா். சுயநிதி பாடப் பிரிவுகளின் இயக்குநா் வெங்கடாசலபதி முன்னிலை வகித்தாா். புதுச்சேரி பல்கலைக்கழக வணிகவியல் துறைத் தலைவரும் இணைப் பேராசிரியருமான அருள்முருகன், மேலாண்மையியல் துறை இணைப் பேராசிரியா் செந்தில்குமாா், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி வணிகவியல் துறை இணைப் பேராசிரியா் ஜூலியஸ் சீஸா் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா். இதில், 25-க்கும் மேற்பட்ட கல்லூரிகள், பல்கலைக்கழகத்திலிருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவா்-மாணவிகள், ஆராய்ச்சி மாணவா்கள், பேராசிரியா்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா். வணிகவியல் தொழில்சாா் கணக்குவைப்பு முறையியல் துறைத் தலைவா் மாரியப்பன் வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் மஞ்சுளா நன்றி கூறினாா்.