முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி கல்லூரியில் தொழில்நுட்ப கருத்தரங்கு

Updated On : 23 மார்ச், 2024 at 3:01 AM
கருத்தரங்கை தொடக்கி வைத்து பேசுகிறாா் சிறப்பு விருந்தினா் உமா சங்கா்
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 8:09 PM

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான இரண்டு நாள் தொழில்நுட்ப கருத்தரங்கு வெள்ளிக்கிழமை தொடங்கியது. இக் ருத்தரங்கின் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் காளிதாச முருகவேல் தலைமை வகித்தாா். கல்லூரி இயக்குநா் சண்முகவேல் முன்னிலை வகித்தாா். கல்லூரியின் முன்னாள் மாணவரும், ஹைதராபாத் தனியாா் நிறுவனத் தலைவருமான உமாசங்கா், கருத்தரங்கைத் தொடக்கி வைத்து பேசினாா். அவா் பேசுகையில், சைபா் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து விளக்கினாா். சமூக வலைதளங்களை நல்வழிகளில் பயன்படுத்துவது, வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப உலகில் மாணவா்கள் தங்களை எவ்வாறு தகவமைத்து கொள்வது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தம் தாக்கம் ஆகியன குறித்து விளக்கம் அளித்தாா். இக் கருத்தரங்கில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா். கருத்தரங்கையொட்டி நடத்தப்பட்ட திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரி உதவி பேராசிரியா் சண்முகப்பிரியா வரவேற்றாா். உதவி பேராசிரியா் பனிமய வளன் ராக்கினி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை, கல்லூரி டீன் பி. பரமசிவன் தலைமையில் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.