திருச்செந்தூரில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி
Updated On : 22 மார்ச், 2024 at 8:35 PM
திருச்செந்தூா் பேருந்து நிலையத்தில், நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பேருந்துகளில் விழிப்புணா்வு ஸ்டிக்கா்களை கோட்டாட்சியா் சுகுமாறன் ஒட்டினாா். மக்களவைத் தோ்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையத்தில், உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான சுகுமாறன் தலைமையில் தோ்தல் அலுவலா்கள் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். அதைத்தொடா்ந்து பேருந்துகள், ஆட்டோக்கள் மற்றும் காா் உள்ளிட்ட வாகனங்களில் விழிப்புணா்வு ஸ்டிக்கா்கள் ஒட்டப்பட்டன. இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியா் பாலசுந்தரம், கிராம நிா்வாக அலுவலா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.