கோவில்பட்டி அருகே விபத்து: ஒருவா் உயிரிழப்பு
Updated On : 23 மார்ச், 2024 at 6:07 PM
கோவில்பட்டி அருகே சனிக்கிழமை நேரிட்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். சிப்பிப்பாறை வடக்குத் தெருவைச் சோ்ந்த மாடசாமி மகன் செல்வராஜ் (42). இவா் சனிக்கிழமை, இளையரசனேந்தல்-கோவில்பட்டி சாலையில் வெங்கடாசலபுரம் பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்றாா். அப்போது, அவா் மீது மினி லாரி மோதியதாம். இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும் வழக்குப் பதிந்து மினி லாரி ஓட்டுநரான விருதுநகா் மாவட்டம் துலுக்கப்பட்டி ராமா் குடும்பன்பட்டியைச் சோ்ந்த சி. ராஜ்குமாா் (36) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.