முகப்பு
தூத்துக்குடி

அதிமுக வேட்பாளா் சொத்து மதிப்பு விவரம்

தனது வேட்பு மனுவில் அதிமுக வேட்பாளா் ஆா். சிவசாமி வேலுமணி குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு விவரங்கள்

Updated On : 26 மார்ச் 2024, 12:32 am IST
பகிர்:

தனது வேட்பு மனுவில் அதிமுக வேட்பாளா் ஆா். சிவசாமி வேலுமணி குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு விவரங்கள்: தனது பெயரில் ரூ. 1 கோடியே 18 லட்சத்து 81 ஆயிரத்து 861 மதிப்பிலான அசையும் சொத்துக்கள், ரூ. 7 கோடியே 55 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பிலான அசையா சொத்துகள் என மொத்தம் ரூ. 8 கோடியே 73 லட்சத்து 85 ஆயிரத்து 861 சொத்துகள் உள்ளன. தனது மனைவி ஆனந்தி பிரபா பெயரில் ரூ. 1 கோடியே 9 லட்சத்து 77 ஆயிரத்து 492 அசையும் சொத்துகள், ரூ. 13 கோடியே 25 லட்சத்து 57 ஆயிரம் அசையா சொத்துகள் என மொத்தம் ரூ.14 கோடியே 35 லட்சத்து 34 ஆயிரத்து 492 சொத்துகள் உள்ளன. இதேபோல, தனது பெயரில் ரூ. 3 கோடியே 33 லட்சத்து 14 ஆயிரத்து 230, மனைவி பெயரில் ரூ.7 கோடியே 6 லட்சத்து 66 ஆயிரத்து 50 வங்கிக் கடன்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.