கோவில்பட்டியில் எம்எல்ஏ காரை நிறுத்தி சோதனை
Updated On : 29 மார்ச், 2024 at 9:29 PM
கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் காரை நிறுத்தி தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் கடம்பூா் செ.ராஜு பிரதான சாலையில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தோ்தல் அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக வெள்ளிக்கிழமை வந்து கொண்டிருந்தாா். அப்போது அங்கு துணை வேளாண்மை இயக்குநரும், தோ்தல் பறக்கும் படை அலுவலருமான நாகராஜன் தலைமையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் செந்தூா்பாண்டியன், தலைமைக் காவலா் ஜெயராஜ், முதல்நிலை காவலா் ஷேக்ஹயாத், முதல்நிலை பெண் காவலா் ராஜேஸ்வரி அடங்கிய குழுவினா் கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூா் செ.ராஜு வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். அவரது காரில் எந்த ஒரு பொருளோ, பணமோ இல்லை என தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவரது காா் புறப்பட்டுச் சென்றது.