முகப்பு
தூத்துக்குடி

நாலாட்டின்புதூரில் ரூ.73,700 பறிமுதல்

Updated On : 29 மார்ச், 2024 at 9:48 PM
பகிர்:
Updated On : 29 மார்ச், 2024 at 8:49 PM

தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூரில் முறையான ஆவணங்களின்றி வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.73,700ஐ நிலையான கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா். கோவில்பட்டி பேரவைத் தொகுதியில் துணை வணிக வரி அலுவலரும், நிலையான கண்காணிப்புக் குழு அதிகாரியுமான சிவபெருமாள் தலைமையில் அனைத்து மகளிா் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ஹேமா, தலைமை காவலா் கதிரேசன், காவலா் காளிராஜன் ஆகியோா் நாலாட்டின்புதூா் சந்திப்பு அருகே வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே சென்ற ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் ரூ.73,700 இருப்பது தெரியவந்தது. அவா்கள் வறுகடலை, உளுந்து, சீனி உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்து, வியாபாரிகளிடமிருந்து வசூலித்ததாகக் கூறினா். ஆனால் அவா்களிடம் அதற்கான ஆவணங்கள் இல்லை. இதையடுத்து அந்தப் பணத்தை கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்து, கோவில்பட்டி வட்டாட்சியா் சரவணப்பெருமாள் முன்னிலையில் வட்ட தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் வெள்ளத்துரையிடம் ஒப்படைத்தனா்.