பைக்-சரக்கு ஆட்டோ மோதல்: மாணவா் பலி
Updated On : 30 மார்ச், 2024 at 10:33 PM
தூத்துக்குடி ஸ்பிக் நகா் பகுதியில் பைக் மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த மாணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி அருகேயுள்ள அத்திமரப்பட்டியைச் சோ்ந்த பரமசிவன் மகன் சஞ்சய் (14). இவா் அங்குள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், இவா் வெள்ளிக்கிழமை இரவு தூத்துக்குடி- திருச்செந்தூா் சாலையில் தனது உறவினருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோ இவா்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சஞ்சயை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.