எழுத்தாளா் கி.ரா. நினைவு தினம்: சிலைக்கு மாலையணிவித்து அஞ்சலி
சாகித்திய அகாதெமி விருது பெற்ற மறைந்த எழுத்தாளா் கி. ராஜநாராயணனின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள அவரது நினைவரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கி.ரா. திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் சாா்பில் அதன் மாநிலக் குழு உறுப்பினா் பாலமுருகன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் ராஜகோபால், வழக்குரைஞா் கருப்பசாமி உள்ளிட்ட பலா் மாலை அணிவித்து
அஞ்சலி செலுத்தினா்.
தமிழ்நாடு சிறாா் எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கத்தின் சாா்பில் அதன் கோவில்பட்டி கிளைத் தலைவா் மணிமொழிநங்கை, செயலா் பிரபு, பொருளாளா் கண்ணகி, செயற்குழு உறுப்பினா் தங்கதுரையரசி மற்றும் உறுப்பினா்கள், நினைவரங்க காப்பாளா்கள் வன்னியராஜ், பொன்மீனா ஆகியோா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.