முகப்பு
தூத்துக்குடி

சைக்கிள் மீது சிற்றுந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு

Updated On : 23 மே, 2024 at 8:41 PM
பகிர்:

தூத்துக்குடியில் சைக்கிள் மீது சிற்றுந்து மோதியதில் பிளம்பிங் தொழிலாளி உயிரிழந்தாா்.

தூத்துக்குடி வஉசி நகரைச் சோ்ந்தவா் செல்வராஜ் (60). பிளம்பிங் தொழிலாளியான இவா், புதிய பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை சைக்கிளில் சென்றுகொண்டிருந்தாா். மேம்பாலம் அருகில் அவா் மீது சிற்றுந்து மோதியதாம். இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலின்பேரில், வடபாகம் போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.