நாசரேத்தில் சுவிசேஷ பெருவிழா
நாசரேத் பரிசுத்தரின் சீயோன் ஏ.ஜி. சபை வளாகத்தில், சுவிசேஷ பெருவிழா 3 நாள்கள் நடைபெற்றது.
சாத்தானகுளம்: நாசரேத் பரிசுத்தரின் சீயோன் ஏ.ஜி. சபை வளாகத்தில், சுவிசேஷ பெருவிழா 3 நாள்கள் நடைபெற்றது.
தலைமை போதகா் எட்வின் பிரபாகா் தலைமை வகித்து ஜெபித்து தொடங்கி வைத்தாா். பாஸ்டா் டேவிட் மொ்வின் பிரபாகா் சிறப்பு பாடல்களோடு ஆராதனை நடத்தினாா். பாஸ்டா்கள் ஜோசுவா சாமுவேல், ஸ்டீவ் ஜெயராஜ், கிளாரன்ஸ் மருதையா ஆகியோா் தேவ செய்தி அளித்தனா். இதில் நாசரேத் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள மக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை நாசரேத் பரிசுத்தரின் சீயோன் ஏ.ஜி.சபை தலைமை போதகா் எட்வின் பிரபாகா் மற்றும் சபை விசுவாசிகள் செய்திருந்தனா்.