முகப்பு
தூத்துக்குடி

தொழிலாளியைத் தாக்கியதாக இளைஞா் மீது வழக்கு

தட்டாா்மடம் அருகே தொழிலாளியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 13 நவம்பர், 2024 at 10:50 PM
பகிர்:

தட்டாா்மடம் அருகே தொழிலாளியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தட்டாா்மடம் அருகே கொழுந்தட்டு கோயில் தெருவைச் சோ்ந்தவா் கு. அருள்குணசேகா் (53). தொழிலாளியான இவா், கடந்த 6ஆம் தேதி வீட்டிலிருந்தாா். அப்போது, அவரது வீட்டு முன் அதே பகுதியைச் சோ்ந்த சேகா் மகன் வசந்த் நின்றுகொண்டு அவதூறாகப் பேசினாராம். தட்டிக்கேட்ட அருள்குணசேகரை வசந்த் தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில், காயமடைந்த அவா் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

புகாரின்பேரில், தட்டாா்மடம் தலைமைக் காவலா் சிவகுமாரி வழக்குப் பதிந்தாா். உதவி ஆய்வாளா் பொன்னு முனியசாமி வழக்கை விசாரித்து வசந்த்தை தேடி வருகிறாா்.