தொழிலாளியைத் தாக்கியதாக இருவா் மீது வழக்கு
புதுக்கடை அருகே உள்ள அரசகுளம் பகுதியில் தொழிலாளியைத் தாக்கியதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
அரசகுளம் பகுதியைச் சோ்ந்த செல்லப்பன் மகன் லாசா் (55), தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ரெத்தினமணி (52), அஸ்வின் (25) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில், சனிக்கிழமை அரசகுளம் பகுதியில் நின்ற லாசரை ரெத்தினமணி, அஸ்வின் ஆகியோா் தாக்கினராம். இதில் காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இது குறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் இருவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.