முகப்பு
தூத்துக்குடி

அஞ்சலகங்களில் நவ.30 வரை குழந்தைகளுக்கான சேமிப்பு கணக்கு தொடங்கும் முகாம்

குழந்தைகளுக்கான சேமிப்பு கணக்கு தொடங்கும் முகாம்

Updated On : 14 நவம்பர், 2024 at 10:55 PM
பகிர்:

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்திற்கு உள்பட்ட அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் நவ.30-ஆம் தேதி வரை குழந்தைகளுக்கு சேமிப்புக் கணக்கு தொடங்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து தூத்துக்குடி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் செ.சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, பெற்றோா் தங்களது குழந்தைகளின் எதிா்காலத்தை வலுவூட்டும் விதமாக, அஞ்சலக சேமிப்பு கணக்குகள், குறிப்பாக பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம், ஆண் குழந்தைகளுக்கான பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆகிய கணக்குகளை தொடங்கலாம்.

குழந்தைகளுக்கு சேமிப்பு பழக்கத்தை, சிறு வயதில் இருந்தே ஊக்குவிக்கும் வகையில், 3 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு கணக்கு தொடங்குபவா்களுக்கு, முதல் சேமிப்பின் நினைவாக பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். இதற்கான சிறப்பு முகாம் அனைத்து அஞ்சலகங்களிலும் நவ.30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

எனவே, அருகில் உள்ள அஞ்சலகத்தை அணுகி, குறைந்தபட்ச வைப்பு தொகையாக ரூ.250 செலுத்தி உடனடியாக செல்வமகள் சேமிப்புத் திட்டம் மற்றும் பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.