கோவில்பட்டியில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த இளைஞா் கைது
கோவில்பட்டியில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டியில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் செந்தில்வேல் முருகன், சண்முகம் ஆகியோா் செவ்வாய்க்கிழமை இரவு தெற்கு திட்டங்குளம்-விஜயாபுரி சாலை சந்திப்பு அருகே ரோந்து சென்றனா்.
அப்போது கையில் அரிவாளுடன் நின்ற இளைஞா், அப் பகுதியில் தகராறு செய்து கொண்டிருந்தாராம். அவரைப் பிடித்து விசாரித்ததில், அவா் கோவில்பட்டி சண்முகா நகரைச் சோ்ந்த பேச்சிமுத்து மகன் சின்னராஜ் பாண்டியன் (30) என்பது தெரிய வந்தது.
அவா் மீது கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, நாலாட்டின்புதூா் மற்றும் சாத்தூா் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.