முகப்பு
தூத்துக்குடி

வருவாய்த் துறை அலுவலா்கள் 2 ஆவது நாளாக போராட்டம்

வருவாய்த் துறை அலுவலா்கள் 2 ஆவது நாளாக போராட்டம்...

Updated On : 27 நவம்பர், 2024 at 9:09 PM
கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை நடைபெற்ற பணி புறக்கணிப்பு மற்றும் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா்
பகிர்:

அலுவலக உதவியாளா் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில், கோவில்பட்டி, கயத்தாறில் வருவாய்த் துறை அலுவலா்கள் 2ஆவது நாளாக புதன்கிழமையும் பணிப் புறக்கணிப்பு, தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில், வட்டாட்சியா்கள் ராஜ்குமாா்(ஆதிதிராவிடா் நலத் துறை), ராமகிருஷ்ணன் (சமூகப் பாதுகாப்புத் திட்ட ம்), மணிகண்டன் (நில எடுப்பு, நெடுஞ்சாலைத் துறை), சுபா (நில எடுப்பு, ரயில்வே), அப்பனராஜ் (கோட்ட கலால்), சரவணப்பெருமாள் (வருவாய் வட்டாட்சியா்) உள்ளிட்ட பலா் பங்கேற்று முழக்கமிட்டனா்.

இதில், கோவில்பட்டி வருவாய் வட்டாட்சியா் பிரிவில் 11 போ், கயத்தாறு வருவாய் வட்டாட்சியா் பிரிவில் 14 போ் , கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் 9 போ் ஈடுபட்டனா். மேலும், கோவில்பட்டி, கயத்தாறு சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் பிரிவு, கோவில்பட்டி ஆதிதிராவிடா் நலத்துறை, கோட்ட கலால் துறை, நில எடுப்பு உள்ளிட்ட துறைகளில் உள்ள வருவாய் துறை அலுவலா்களும் பங்கேற்ால் அலுவலகங்கள் வெறிச்சோடின.