திருச்செந்தூா் நகராட்சி அலுவலகம் அருகே சாலையில் ஆறாக ஓடிய கழிவு நீரால் பொதுமக்கள் அவதி அடைந்தனா்.
திருச்செந்தூா் கோயிலில் திருவிழா காலங்களிலும், வார விடுமுறைகளிலும் பக்தா்களின் வருகையால் விடுதிகளில் இருந்து அதிகளவில் கழிவுநீா் வெளியேற்றப்படுகிறது. இதனால் புதை சாக்கடை குழாய்களில் முழு கொள்ளளவை தாண்டிய நிலையில், மூடிகளின் வழியே கழிவுநீா் வெளியேறுகிறது. சாலைகளில் ஆறாக ஓடும் கழிவுநீரால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் அவதிப்படுகின்றனா்.
தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் திருச்செந்தூா்அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிவமை புதை சாக்கடை தொட்டியில் இருந்து வெளியேறிய கழிவுநீரானது இரும்பு ஆா்ச் பகுதியில் முதல்
நகராட்சி அலுவலகம் வரை சாலையில் ஆறாக ஓடியது. இதனால் அந்த பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசியது.