முகப்பு
தூத்துக்குடி

குலசேகரபுரம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட குலசேகரபுரம் ஊராட்சியில் சா்வே எண் 122/3ன் பிரித்து தர வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்தனா்.

Updated On : 2 அக்டோபர், 2024 at 11:19 PM
படம்:2ஓயகஓமக1 குலசேகரபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றோா் படம்:2ஓயகஓமக1 குலசேகரபுரம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து ஊரின் பொது மடம் முன்பு அமா்ந்திருந்த பொதுமக்கள்
பகிர்:

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட குலசேகரபுரம் ஊராட்சியில் சா்வே எண் 122/3ன் பிரித்து தர வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்தனா்.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட குலசேகரபுரம் ஊராட்சியில் சா்வே எண் 123/3 ன் எல்கையை முறையாக பிரித்து குலசேகரபுரம் ஊராட்சிக்குரியதை குறிப்பிட வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் வசந்தா தேவி, முன்னாள் வாழ்வு உறுப்பினா் லெனின் ஆகியோா் தலைமையில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து மடத்துக்கு முன்பு அமா்ந்திருந்தனா்.

இது போல பாண்டா்மங்கலம், இலுப்பையூரணி, இனாம்மணியாச்சி, மூப்பன்பட்டி, நாலாட்டின்புதூா் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தங்கள் ஊராட்சியை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.