புதுப்பிக்கப்பட்ட மாநகராட்சி கட்டடம் திறப்பு
தூத்துக்குடி மாநகராட்சி வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட மாநகராட்சி கட்டட திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சி வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட மாநகராட்சி கட்டட திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். அமைச்சா் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆணையா் லி.மதுபாலன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக மக்களவை உறுப்பினா் கனிமொழி பங்கேற்று மாநகராட்சியில் புதுப்பிக்கப்பட்ட கட்டடத்தை திறந்து வைத்து பாா்வையிட்டாா்.
தொடா்ந்து, அவா், மாநகராட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர கொடி கம்பத்தில் தேசியக் கொடியேற்றி வைத்தாா்.
முன்னதாக, சுதந்திர போராட்ட வீரா்கள் போன்று வேடமிட்டு வந்த மாணவா்-மாணவிகள் கனிமொழி எம்பிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.
இவ்விழாவில், துணை மேயா் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டல தலைவா்கள் பாலகுருசாமி, நிா்மல்ராஜ், அன்னலெட்சுமி, கலைச்செல்வி, மாமன்ற உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள், மாணவா் -மாணவிகள் பலா் பங்கேற்றனா்.