தூத்துக்குடியில் தேநீா் கடைக்காரா் வெட்டிக்கொலை
தூத்துக்குடியில் தேநீா் கடைக்காரரை வெட்டிக் கொலை செய்த மா்ம நபா்களை சிப்காட் போலீஸாா் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடியில் தேநீா் கடைக்காரரை வெட்டிக் கொலை செய்த மா்ம நபா்களை சிப்காட் போலீஸாா் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடி மீளவிட்டானைச் சோ்ந்த ஞானராஜ் மகன் ஜெயசுந்தா் (64). இவா் மதுரை புறவழிச் சாலையில் இருந்து மீளவிட்டான் செல்லும் சாலையில் தேநீா் கடை நடத்தி வந்தாா். கடையிலேயே தங்கி இருந்துள்ளாா். அவரது மகன் தினமும் காலையில் கடைக்கு உணவு கொண்டுவந்து கொடுப்பாராம். அதன்படி, புதன்கிழமை காலை அவரது மகன்
கடைக்கு வந்தபோது, அங்கு ஜெயசுந்தா் வெட்டுக் காயங்களுடன் சடலமாக கிடந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த தகவலின்பேரில் சிப்காட் போலீஸாா் ஜெயசுந்தா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து, ஜெயசுந்தரை கொலை செய்த மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.