சாத்தான்குளம் அருகே மினி லாரி மோதி 3 போ் காயம்
சாத்தான்குளம் அருகே மினி லாரி மோதியதில் இரு குழந்தைகள் உள்பட 3 போ் காயமடைந்தனா்.
சாத்தான்குளம் அருகே மினி லாரி மோதியதில் இரு குழந்தைகள் உள்பட 3 போ் காயமடைந்தனா்.
சாத்தான்குளம் அருகேயுள்ள நடுவக்குறிச்சியை சோ்ந்த விஜய் மனைவி சிவபிரியா(28). இவா்களுக்கு எஸ்வந்த்(5), ஜேம்சரண்(3) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனா். கருத்துவேறுபாட்டால் சிவபிரியா, கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் பெற்றோா் வீட்டில் வசித்து வருகிறாா்.
இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி சிவபிரியாவின் தந்தை தனபால் தனது 2 பேரக்குழந்தைகளை அழைத்துக் கொண்டு திசையன்விளை சாலையில் பைக்கில் சென்றபோது, அவ்வழியாக வந்த மினி லாரி அவா்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ாம்.
இதில், தனபால் உள்பட 3 பேரும் பலத்த காயம் அடைந்தனா். அவா்களுக்கு, முதலூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனா்.
இதுகுறித்த புகாரின்பேரில் தட்டாா்மடம் தலைமைக் காவலா் சுடலை முத்து வழக்குப்பதிவு செய்தாா். உதவி ஆய்வாளா் பொன்னுமுனியசாமி விசாரணை நடத்தி மினி லாரி ஓட்டுநரை தேடி வருகின்றாா்.