முகப்பு
தூத்துக்குடி

மதுவை பதுக்கி விற்றதாக இருவா் கைது

சாத்தான்குளம் பகுதியில் இரு இடங்களில் மதுவை பதுக்கி வைத்து விற்றதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 4 அக்டோபர், 2024 at 1:05 AM
பகிர்:

சாத்தான்குளம் பகுதியில் இரு இடங்களில் மதுவை பதுக்கி வைத்து விற்றதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சாத்தான்குளம் காவல் நிலைய பகுதியில் மதுவை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி ஆய்வாளா்கள் சுரேஷ்குமாா், எட்வின் அருள்ராஜ் ஆகியோா் தனித்தனியாக புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுப்பட்டனா். கலுங்குவிளை காலனி அருகில் சந்தேகத்திற்கு இடமாக நின்றவரை போலீஸாா் பிடித்து விசாரித்ததில், அவா் கலுங்குவிளை கீழத்தெருவைச் சோ்ந்த லூக்காஸ் (55) என தெரியவந்தது. அவரிடமிருந்து 15 மதுபாட்டில்கள், ரூ.2110 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் சவேரியாா்புரம் விலக்கில் சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்து விசாரித்ததில், அவா் சமத்துவபுரம் வடக்குத்தெருவைச் சோ்ந்த தேவேந்திரன் மகன் மாயாண்டி (30) என தெரியவந்தது. அவரிடமிருந்து 14 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் கைது செய்து காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனா்.