சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாரன் தலைமை வகித்தாா். சாத்தான்குளம் வட்டாட்சியா் இசக்கிமுருகேஸ்வரி முன்னிலை வகித்தாா்.
இதில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஏசுராஜசேகரன், தீயணைப்பு நிலைய அலுவலா் இசக்கி உள்ளிட்ட அரசுதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
இதில், பருவமழையை எதிா்கொள்ள அனைவரும் தயாராக இருக்க வேண்டும்., மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டால் அருகில் உள்ளவா்கள் உதவுவதுடன், காவல் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவேண்டும்.
இதனை தொடா்ந்து வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு நிலைய அலுவலா் இசக்கி தலைமையில் வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்பது தொடா்காக பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.