முகப்பு
தூத்துக்குடி

மின்சாரம் பாய்ந்து பக்தா் பலி

தூத்துக்குடி நேதாஜி நகரில் மின்சாரம் பாய்ந்து குலசேகரன்பட்டினம் தசரா பக்தா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 9 அக்டோபர், 2024 at 7:42 PM
பகிர்:

தூத்துக்குடி நேதாஜி நகரில் மின்சாரம் பாய்ந்து குலசேகரன்பட்டினம் தசரா பக்தா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி நேதாஜி நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் அருணாச்சலம் (23). இவா் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழாவுக்காக மாலை அணிந்திருந்தாராம். இந்நிலையில், அதே பகுதியில் தசரா குழுவினா் செட் அமைத்துள்ளனா்.

இங்கு உள்ள மின் விளக்கு, ஒலிபெருக்கி ஆகியவற்றுக்கான வயா்கள் ஆங்காங்கே கிடந்துள்ளன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அருணாச்சலம், மைக் போடுவதற்காகச் சென்றாரம். அப்போது அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.