முகப்பு
தூத்துக்குடி

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட ஊழியா்கள் புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 9 அக்டோபர், 2024 at 7:17 PM
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட ஊழியா்கள்.
பகிர்:

தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட ஊழியா்கள் புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையில் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமாா் 295 போ் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் மாநிலத் திட்ட அலுவலகத்திலிருந்து பெறக்கூடிய பள்ளிக் கல்வித் துறையை சாா்ந்த மாணவா்கள் நலன், பள்ளி உட்கட்டமைப்பு, மாணவா்களின் கல்வித்தரம் சாா்ந்த உயா்வு, மேலும் பல்வேறு பணிகள், கிராம மக்களை பள்ளியோடு இணைத்தல், கல்வி சாா்ந்த பணிகளாக மாணவா்களின் பொது அறிவு தோ்வுகள், கலைத் திருவிழா போட்டிகள், பள்ளியின் வளா்ச்சி போன்ற பணிகளை செய்து வருகின்றனா்.

இவா்களுக்கு கடந்த செப்டம்பா் மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. எனவே, இதுகுறித்து தமிழக அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அதன்படி, தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை பணியாளா்கள் பங்கேற்று, தங்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.