தூத்துக்குடி அருகே மணல் திருட்டு: 4 போ் கைது
தூத்துக்குடி அருகே வா்த்தகரெட்டிபட்டி பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி அருகே வா்த்தகரெட்டிபட்டி பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி அருகே தட்டப்பாறை காவல் உதவி ஆய்வாளா் குமரேசன் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். வா்த்தகரெட்டிபட்டி அருகேயுள்ள வலையாா் குளத்தில் சிலா் மணல் திருடுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் அங்கு சென்றனா்.
அப்போது, சிலா் அனுமதியின்றி மணல் அள்ளுவது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, துப்பாஸ்பட்டியைச் சோ்ந்த மரிய அந்தோணி (27), கோரம்பள்ளம் சுப்புகனி (48), வேல்குமாா் (36), அழகுசுந்தர்ராஜா (29) ஆகிய 4 பேரை கைது செய்தனா்; மணல் அள்ளுவதற்கு பயன்படுத்திய 2 பொக்லைன்கள், 4 லாரிகளை பறிமுதல் செய்தனா்.