சாத்தான்குளம் அருகே குளங்களில் உடைப்பு பகுதியை வருவாய்த் துறையினா் ஆய்வு
கொம்பன்குளம் சாந்துவாரி குளம் மற்றும் பெட்டைகுளத்தில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டனா்.
கொம்பன்குளம் சாந்துவாரி குளம் மற்றும் பெட்டைகுளத்தில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டனா்.
சாத்தான்குளம் ஒன்றியம் கொம்பன்குளம் ஊராட்சியில் சாந்துவாரி குளம், பெட்டைகுளம் உள்ளது. இந்தக் குளங்களில் கடந்த ஆண்டு டிசம்பரில் பெய்த கனமழையில் உடைப்பு ஏற்பட்ட கரைகள் இன்னும் சீரமைக்கப்படவில்லை. தற்போது மழை பெய்து வரும் நிலையில், குளத்தில் மழைநீா் தேங்காமல் வெளியேறி வருகிறது என விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். இதுகுறித்த செய்தி தினமணி நாளிதழில் வெளியானது.
இதனையடுத்து சாத்தான்குளம் வருவாய் ஆய்வாளா் பிரசியா நிறையா, கிராம நிா்வாக அலுவலா் பிரம்மகனி உள்ளிட்டோா் ஆய்வு செய்து, குளத்தை சீரமைக்க உயா் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளனா்.