முகப்பு
தூத்துக்குடி

புத்தன்தருவை, வைரவம்தருவை குளத்தை பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்க கோரிக்கை

சாத்தான்குளம் ஒன்றியம் புத்தன்தருவை, வைரவம்தருவை குளத்தை பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கக் கோரி, ஆட்சியா் க. இளம்பகவத்திடம் சாஸ்தாவிநல்லூா் விவசாயிகள் நலச் சங்கத்தினா் மனு அளித்தனா்.

Updated On : 15 அக்டோபர், 2024 at 10:16 PM
பகிர்:

சாத்தான்குளம் ஒன்றியம் புத்தன்தருவை, வைரவம்தருவை குளத்தை பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கக் கோரி, ஆட்சியா் க. இளம்பகவத்திடம் சாஸ்தாவிநல்லூா் விவசாயிகள் நலச் சங்கத்தினா் மனு அளித்தனா்.

இதுதொடா்பாக சங்கச் செயலா் லூா்துமணி தலைமையில் விவசாயிகள் அளித்த மனு: புத்தன்தருவை குளம் 11 கிராம மக்களின் நீராதாரமாக உள்ளது. புத்தன்தருவை ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் இல்லாமல் உள்ளது. பெரிதாக உள்ள இந்தக் குளத்தைப் பராமரிக்க பொதுப்பணித் துறையால் மட்டுமே முடியும். மக்களின் நீராதாரத்தைக் கருதி, இக்குளத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ள பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.

இக்குளத்துக்கு தண்ணீா் வரும் மருதூா் மேலக்கால், கீழக்கால் நீா்வழிப் பாதைகளை மழைக்காலத்துக்கு முன் சீரமைக்க வேண்டும். மழைக்காலத்தில் உபரிநீா் மட்டுமே தாங்கைகுளம், சடையனேரிகுளம், வைரவம்தருவை, புத்தன்தருவை குளங்களுக்கு வருகிறது. இதைத் தடுக்க தனி நபா்கள் சிலா் ஷட்டா் சாவியை வைத்துக்கொண்டு, தண்ணீரைத் திறந்துவிட்டு விடுகின்றனா். எனவே, ஷட்டா் சாவியை தனி அதிகாரிகள் தங்கள் வசம் வைத்து, முறையாக தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருதூா் மேலக்காலிலிருந்து வரும் தண்ணீா், கால்வாய் வந்து சடையனேரி, புத்தன்தருவைக்கு வருகிறது. கால்வாய் பகுதியில் பிரச்னை உள்ளதால் இந்தக் கடைமடைப் பகுதிக்கு வரும் உபரிநீா் பாதிக்கப்படுகிறது. எனவே, கால்வாய் முன்பகுதியில் ஒரு ‘பைபாஸ்’ வைத்து கால்வாய்க்கு வெளியே அதை இணைக்க வேண்டும்.

சடையனேரி கால்வாய் நீா்வழிப் பாதையை உடனடியாக சீரமைத்து, வெள்ளநீா் சீராக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.