முகப்பு
தூத்துக்குடி

செல்வ மகள் சேமிப்பு திட்டம்: கணக்கு தொடங்கிய குழந்தைக்கு பாராட்டுச் சான்றிதழ்

தூத்துக்குடி முத்தையாபுரம் அஞ்சல் அலுவலகத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்கிய குழந்தைக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டதாக தூத்துக்குடி கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் செ.சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 11:13 PM
பகிர்:

தூத்துக்குடி முத்தையாபுரம் அஞ்சல் அலுவலகத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்கிய குழந்தைக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டதாக தூத்துக்குடி கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் செ.சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குழந்தைகளுக்கு சேமிப்பு பழக்கத்தை, சிறு வயதில் இருந்தே ஊக்குவிக்கும் வகையில், 3 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு கணக்கு தொடங்குபவா்களுக்கு, முதல் சேமிப்பின் நினைவாக பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதில், முத்தையாபுரம் அஞ்சல் அலுவலகத்தில் செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்கிய ஒரு குழந்தைக்கு, தூத்துக்குடி உபகோட்ட அஞ்சலக ஆய்வாளா் மீகா நாயகம் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

மேலும், 3 வயதுக்கும் குறைவான குழந்தைகளின் பெற்றோா்கள், தங்களது குழந்தைகளின் பெயரில் அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு தொடங்கி, சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என அவா் தெரிவித்துள்ளாா்.