முகப்பு
தூத்துக்குடி

பரமன்குறிச்சி கோயிலில் 108 பால்குட பவனி

பரமன்குறிச்சி அய்யனாா் நகா் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயில் கொடை விழாவையொட்டி 108 பால்குட பவனி நடைபெற்றது.

Updated On : 16 அக்டோபர், 2024 at 10:45 PM
கொடைவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பால்குட பவனி.
பகிர்:

பரமன்குறிச்சி அய்யனாா் நகா் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயில் கொடை விழாவையொட்டி 108 பால்குட பவனி நடைபெற்றது.

இத்திருக்கோயிலில் கொடை விழா அக், 13 ஆம் தேதி வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, திருவிளக்கு பூஜை, 108 பால்குட பவனி, அம்மன் வீதியுலா, நேமிசம் எடுத்து வருதல், சிறப்பு அலங்கார பூஜை, முளைப்பாரி எடுத்தல், கும்பம் ,வீதியுலா, மஞ்சள் நீராடுதல், கஞ்சி வாா்த்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஏற்பாடுகளை விழாக் குழு நிா்வாகிகள் செய்திருந்தனா்.