முகப்பு
தூத்துக்குடி

மழைநீா் வடிகால் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

விளாத்திகுளம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மழைநீா் வடிகால் பணிகள் மற்றும் வாருகால் தூா்வாரும் பணிகள் கள ஆய்வு புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 23 அக்டோபர், 2024 at 10:46 PM
பகிர்:

விளாத்திகுளம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மழைநீா் வடிகால் பணிகள் மற்றும் வாருகால் தூா்வாரும் பணிகள் கள ஆய்வு புதன்கிழமை நடைபெற்றது.

விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் பேரூராட்சி அதிகாரிகளுடன் ஒவ்வொரு வாா்டு பகுதியாக நேரில் சென்று பணிகளை ஆய்வு செய்தாா்.

விளாத்திகுளம் வேம்பாா் சாலையில் காவல் நிலையம் அருகே புதிதாக கழிவு நீா் வாருகால் அமைப்பதற்கு உரிய திட்ட அறிக்கை தயாா் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். மேலும் மழை நீா் வழிந்தோடி செல்லும் வடிகால் சீரமைப்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும் அதிகாரிகளிடம் தெரிவித்தாா்

ஆய்வின்போது, விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலா் செந்தில்குமாா், பேரூராட்சித் தலைவா் சூா்யா அய்யன்ராஜ், துணைத் தலைவா் இரா.வேலுச்சாமி, திமுக ஒன்றியச் செயலா்கள் அன்பராஜன், சின்ன மாரிமுத்து, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் நடராஜன், பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் மீனாட்சி சுந்தரம், திமுக இளைஞா் அணி துணை அமைப்பாளா் இம்மானுவேல், மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், வாா்டு செயலா் ஸ்டாலின் கென்னடி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீதா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.