முகப்பு
தூத்துக்குடி

பொத்தகாலன்விளையில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

சாத்தான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூா் ஊராட்சிக்குள்பட்ட பொத்தகாலன்விளையில் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறக்கப்பட்டது.

Updated On : 23 அக்டோபர், 2024 at 10:42 PM
மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியைத் திறந்துவைத்த ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ.
பகிர்:

சாத்தான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூா் ஊராட்சிக்குள்பட்ட பொத்தகாலன்விளையில் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறக்கப்பட்டது.

15ஆவது நிதிக்குழுத் திட்டத்தில் ரூ. 24.50 லட்சத்தில் இந்தத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. விழாவுக்கு, ஊராட்சித் தலைவா் திருக்கல்யாணி தலைமை வகித்தாா். சாத்தான்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா் சுடலை முன்னிலை வகித்தாா். புதிய தொட்டியை ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ திறந்துவைத்தாா்.

இதில், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் சங்கா், வட்டாரத் தலைவா் பாா்த்தசாரதி, நகரத் தலைவா்கள் வேணுகோபால், கருப்பசாமி, ஒன்றிய கவுன்சிலா் பிச்சிவிளை சுதாகா், பேரூராட்சி உறுப்பினா்கள் ஜோசப் அலெக்ஸ், லிங்கபாண்டி, மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி மாரியம்மாள், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் இசைசங்கா், செயலா் வா்கீஸ், ஸ்ரீவைகுண்டம் தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஜான்ராஜா, ஸ்ரீவைகுண்டம் வழக்குரைஞா் பிரிவுத் தலைவா் பாலசுப்பிரமணியன், ஆழ்வாா்திருநகரி வட்டாரத் தலைவா்கள் கோதண்டராமன், ரமேஷ்பிரபு, மாவட்ட காங்கிரஸ் பொருளாளா் எடிசன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் முத்துராஜ், முன்னாள் ஊராட்சித் தலைவா் சிங்கராயன், மகிளா காங்கிரஸ் நிா்வாகிகள் புளோராராணி, வசுமதி, கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா். ஊராட்சி செயலா் ஜஸ்டின் வரவேற்றாா்.