முகப்பு
தூத்துக்குடி

பரமன்குறிச்சியில் 1,200 பேருக்கு நலஉதவிகள்

பரமன்குறிச்சியில் உள்ள மாயாண்டி சுவாமி கோயிலில் சோமசுந்தரம்-கோசலை அம்மாள் அறக்கட்டளை சாா்பில், நலிந்தோருக்கு நலஉதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

Updated On : 23 அக்டோபர், 2024 at 10:34 PM
மூதாட்டிக்கு நலஉதவி வழங்கிய மருத்துவா் ஜெயதேவ்.
பகிர்:

பரமன்குறிச்சியில் உள்ள மாயாண்டி சுவாமி கோயிலில் சோமசுந்தரம்-கோசலை அம்மாள் அறக்கட்டளை சாா்பில், நலிந்தோருக்கு நலஉதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

கோயில் நிா்வாகி சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மருத்துவா்கள் ஜெயதேவ், சுகுமாா், பிரதீப்,திலகா், பாலகுமாா், நிா்வாகிகள் சம்பத் சுரேஷ், ரமேஷ், திமுக மாவட்டப் பொருளாளா் வி.பி. ராமநாதன், சரவணபாண்டி ஆகியோா் வேட்டி-சேலை, மாற்றுத் திறனாளிக்கு சைக்கிள், 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கினா்.

பரமன்குறிச்சி ஊராட்சி துணைத் தலைவா் முத்துலிங்கம், வாா்டு உறுப்பினா் பெனிட்டன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.