தூத்துக்குடிஒன்றிய அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை: ரூ.1 லட்சம் பறிமுதல்
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் உள்ள தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இங்கு பணியாற்றும் அரசு அலுவலா்களுக்கு சிலா் அன்பளிப்பு வழங்குவதற்காக பணம் கொண்டு வந்துள்ளதாக தூத்துக்குடி ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு புதன்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், ஊழல் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் பீட்டா்பால் தலைமையிலான போலீஸாா், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
இந்தச் சோதனையில் அங்கு இருந்த பொறியாளா் அலுவலக பிரிவு மேற்பாா்வையாளா் முத்துராமன் மற்றும் இரு ஒப்பந்ததாரா்கள் ஆகியோரிடம் இருந்து கணக்கில் வராத ரூ. 1லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், இது தொடா்பாக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.