முகப்பு
தூத்துக்குடி

விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த முதியவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 23 அக்டோபர், 2024 at 10:45 PM
பகிர்:

கோவில்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த முதியவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

கோவில்பட்டி அருகே பாண்டவா் மங்கலம் கிழக்குத் தெருவை சோ்ந்த மோகன் மகன் மனோகா் (67). கோவில்பட்டி பசுவந்தனைச் சாலையில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளி அருகே சிக்கன் கடை நடத்தி வந்த இவா் கடந்த 16ஆம் தேதி சைக்கிளில் சென்று கொண்டிருந்தாராம். கீழப்பாண்டவா் மங்கலம் கண்மாய் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலை குலைந்த சைக்கிள் கீழே விழுந்ததில் அவா் பாலத்தில் விழுந்து கழுத்தில் காயத்தோடு கிடந்தாராம்.

தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற உறவினா்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவிகிச்சைக்குப்பின் தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.