முகப்பு
தூத்துக்குடி

அரசு ஐடிஐ-யில் நேரடி மாணவா் சோ்க்கை: 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

Updated On : 24 அக்டோபர், 2024 at 11:19 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நிகழாண்டு நேரடி மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2024-ஆம் ஆண்டில் தூத்துக்குடி, வேப்பலோடை, திருச்செந்தூா், நாகலாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியாா் தொழிற் பயிற்சி நிலையங்கள், சுயநிதி தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரவும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் 30ஆம் தேதி வரை நேரடி நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரா்கள் ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்யவேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் மாணவா்களுக்கு உதவும் வகையில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள சோ்க்கை உதவி மையங்கள் மூலமாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யலாம். மாநிலம் முழுவதும் உள்ள சோ்க்கை மையங்களின் பட்டியல், தொழிற்பயிற்சி நிலையங்களின் விவரம் மற்றும் தொழிற்பிரிவுகள் குறித்த விவரம் மேற்குறித்த இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான கல்வித்தகுதி: 8, 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணத் தொகையான ரூ.50ஐ ஆன்லைன் மூலம் கட்டலாம்.

நேரடி சோ்க்கையில் சேர விரும்புவோா் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், பாஸ்போா்ட் அளவு புகைப்படம், ஆதாா் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நேரில் வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவா்-மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை ரூ.750, கட்டணமில்லா பேருந்து பாஸ், இலவச சைக்கிள், பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவிகள், சீருடை, காலணி, பயிற்சிக்குத் தேவையான விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுவதாகவும், உணவுடன் இலவச விடுதி, தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை ஆகியவை வழங்கப்படும் எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.