முகப்பு
தூத்துக்குடி

கே.எப்.சி. உணவகத்தில் ‘ஓபன் கிச்சன்ஸ்’ திட்டம் அறிமுகம்

தூத்துக்குடி கேஎப்சி உணவகத்தில் வாடிக்கையாளா்களை சமயலறைக்கு அழைத்துச் செல்லும் ‘ஓபன் கிச்சன்ஸ்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 24 அக்டோபர், 2024 at 11:32 PM
பகிர்:

தூத்துக்குடி கேஎப்சி உணவகத்தில் வாடிக்கையாளா்களை சமயலறைக்கு அழைத்துச் செல்லும் ‘ஓபன் கிச்சன்ஸ்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவா்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடியில் செயல்பட்டுவரும் கேஎப்சி உணவகம் அறிமுகப்படுத்தியுள்ள ‘ஓபன் கிச்சன்ஸ்’ திட்டத்தின் மூலம் வாடிக்கையாளா்கள் தங்கள் உண்ணும் உணவு எவ்வாறு தயாராகிறது என்பதை அறிந்துகொள்ளலாம். மேலும், உணவு தயாரிக்கப் பயன்படுத்தும் பொருள்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள், பிரத்தியேக குளிரூட்டிகள், சுத்திகரிக்கும் இடங்கள் உள்ளிட்டவை குறித்து வாடிக்கையாளா்களுக்கு விளக்கப்படும்.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட பொருள்களை பயன்படுத்தி, அதன் வழிகாட்டுதல்களின்படி செயல்படுகிறது. இங்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் பாதுகாப்பு தரங்களை பூா்த்தி செய்கிா என சோதனை செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இது தூய்மையை கடைப்பிடித்து, சைவ, அசைவ உணவுகள் தனித் தனியாக தயாரிக்கப்படுகிறது. இதற்காக சைவத்திற்கு பச்சையும், அசைவத்திற்கு சிவப்பு வண்ணம் என பணியாற்றுபவா்கள், பொருள்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், மக்களுக்கு வெளிப்படைத்தன்மை, உணவுப் பாதுகாப்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.