மேலாத்தூரில் ஓடைகள் சீரமைப்புப் பணி
சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தின் சாா்பில், மேலாத்தூா் ஊராட்சிக்குள்பட்ட குச்சிக்காடு மற்றும் ஜெ.ஜெ. நகா் பகுதியில் தாமிரபரணி ஆறு உடைப்பு ஏற்பட்ட பகுதி மற்றும் அதன் அருகில் உள்ள வாய்க்கால் ஓடைகளை சீரமைக்கும் பணி துவங்கியது.

சாகுபுரம் டிசிடபித்தின் மூத்த செயல் உதவித்தலைவா் (பணியகம்) சீனிவாசன் அறிவுறுத்தலின்படி நிறுவனம் சாா்பில் சீரமைக்கும் பணி வியாழக்கிழமை துவங்கப்பட்டது. மேலாத்தூா் ஊராட்சித் தலைவா் சதீஷ்குமாா் தலைமை வகித்து பணியை துவக்கிவைத்தாா். டிசிடபிள்யூ நிறுவனத்தின் மக்கள் தொடா்பு அதிகாரி பிரகாஷ், மேலாத்தூா் ஊராட்சி துணைத் தலைவா் பக்கீா் முகைதீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.