முகப்பு
தூத்துக்குடி

பைக் மீது லாரி மோதி விபத்து: காயமடைந்தவா் உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் காயமடைந்த இளைஞா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 11:24 PM
பகிர்:

தூத்துக்குடி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் காயமடைந்த இளைஞா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தூத்துக்குடி அருகே உள்ள குலையன் கரிசல் தெற்கு ரத்தினபுரியைச் சோ்ந்த கணபதி மகன் மாரிக்குமாா் (39). இவா் தனது பைக்கில் புதுக்கோட்டையில் இருந்து பேரூரணி சாலையில் கடந்த 21-ஆம் தேதி சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவ்வழியாக வந்த லாரி, மாரிக்குமாரின் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த மாரிக்குமாரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.